பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பால குமரன் பரிவுடன் அன்னையைப்
      பணிந்திடச் சென்றனனே!
நீல விழியினில் நீர்வடித் தன்னை
      நின்றிடக் கண்டனனே! 2

“அன்னாய்! அன்னாய்! அழுகையின் காரணம்
      அறைகுவை, ”என்றனனே;
“பொன்னே, கண்ணே புகலுவன்,” என்றே
      பூவை நவின்றனளே: 3

“டில்லியின் மன்னவன் தெய்வக் குதிரையைத்
      தேடிப் பெற்றனனாம்;
வல்லவர் வந்ததை வகைபெற ஒட்டிடப்
      பந்தயம் வைத்தனனாம்; 4

நல்லது குதிரையை நான் அடக் குவனென
      நாடினர் உன்தந்தை ;
சொல்லிட மனமிலை சூழ்ந்தனர் சிறை”, யெனச்
      சோர்ந்தனள் நல்லன்னை. 5

“ஆஹா” என்றே அலறி எழுந்தான்
      அஞ்சா ஜயசிங்கன்;
“வேகக் குதிரையை வெல்வேன்,” என்றான்
      வீரன் ஜயசிங்கன். 6

“அந்தோ குழந்தாய்! ஆகா துன்னால்”
      என்றாள் அன்னேயுமே.
“தந்தை இகழ்வைத் தநயன் தீர்ப்பேன்
      தாயே மன்னியுமே” 7

என்றே இளைஞன் அன்பால் இயம்பி
      இனிதே வணங்கினனே;
அன்றே அவளும் ஆசிகள் கூறி
      அனுப்பிட இணங்கினளே. 8

56