பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.முத்துப்பாடல்கள்.pdf42. முத்தேவியர் வணக்கம்


கல்விக் குரிய கலைமகளே!
    கலைகள் பலப்பல எமக்கருளே.
செல்வம் கொழிக்கும் திருமகளே!
    சிறப்பாய் வாழ்ந்திட எமக்கருளே. 1

வலிமைக் குரிய மலைமகளே!
    வளமுறத் திருவருள் புரிந்தருளே.
தலையால் வணக்கம் புரிகுவமே
    தயவாய்க் காத்தருள் மூவருமே. 2

61