பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.41. எங்கள் தமிழ்


எங்கள் தமிழ் நல்ல தமிழ்
எழுதப் பேச எளிய தமிழ்.

ஏணை ஆட்டி எங்கள் அன்னை
இன்ப மாகப் பாடும் தமிழ்.

குழந்தை யாகத் தவழ்ந்த போது
கொஞ்சி முத்தம் கொடுத்த தமிழ்.

நிலவைக் காட்டி நாயைக் காட்டி
நெய்யும் சோறும் தந்த தமிழ்.

அன்னை தந்தை அத்தை மாமி
அருமைக் கதைகள் சொன்ன தமிழ்.

பெரியர் சிறியர் பலரும் கூடிப்
பேசிப் பேசி மகிழும் தமிழ்.

பாலும் தேனும் கலந்த தமிழ்
நாளும் நாங்கள் கற்கும் தமிழ்.

ஆசை தீரப் படிப்போம்;
காசும் பொன்னும் குவிப்போம்.

60