பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[32] இது முறையோ? டு நாட்டையாளும் மன்னன் மக்கள் யாவரையும் காக்கும் மாண்புடையவன். குடிபுரந்தொழுகிக்கோலோச்சும் பொறுப்புள்ள ஆக, ஏற்றத்தாழ்வின்றி எல்லார்க்கும் கல்லனவற்றை நல்கும் பெருந்தகை. ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் மற்ருெரு கண்ணுக் குச் சுண்ணும்பும் வைக்கும் ஒருபாற் கோடியொழுகும் உயர்குண இன்மை செங்கோல் வேந்தனிடம் காணப்பெருத பண்பாகும். எல்லோரும் இன்புற்றிருக்க கினப்பது தான் அவனது குறிக்கோளா கும். இங்ங்ணம் முறை செய்து காப்பாற்றுவதனுல்தான் மக்கள் அவனை இறை-கடவுள்-என்று போற்றும் வழக்கமும் எழுந்தது. 烹 蠶 氢 பருவம் எய்திய பெண் ஒருத்தி தென்னவன்பால் காதல் கொள்ளுகின்ருள். காதல் முற்றிப் பெரிதும் கலங்குகின்ருள். தன் தோழியை நோக்கி இவ்வாறு கூறுகின்ருள்: ' தோழி, செங்கோல் மன்னன், நம் தென்னவன், மன்னுயிர்க்கெல்லாம் காவலனல்லவா? அவ்வுயிர்களுள் யானும் ஒருத்தியன்ருே? எல்லா உயிர்களையும் சரிசமமாக கினைப்பதுதானே முறை செய்து காப்பாற்றுவதற்கு அழகு ஏனையோரெல்லோரும் உண்டு, உறங்கி, மகிழ்ந்து உவப்புட னிருக்கவும் யான் ஒருத்தி மட்டிலும் மனம் உடைந்து வருந்திப் புழுங்கிச் சாகவும் முறை செய்வது சரியா? இது ஒரு வரிசையில் உண்போருக்குப் பாலை வார்த்து மற்ருெரு வரிசையில் உண்போருக்கு கீரை ஊற்றுவது போலல்லவா இருக்கின்றது? இது பாண்டியன் மனத்திற்குத் தக்கதோ? தென்னவனின் குலப்பெருமைக்கு இது முறையோ? மன்னனே மாண்புக்குறைவுடைய செயலை மேற் கொள்ளின் அவன்கீழ் வாழும் நாம் என்ன செய்ய முடியும்? சொல் ' என்கின்ருள்.