பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[35] குவளை மலரின் தவப் பயன்! ஒரு சமயம் தென்னவன் மேளதாளத்துடன் தேர்மீது உலா வருகின்றன். மேளதாள முழக்கத்தைக் கேட்ப கங்கையொருத்தி உள் வீட்டிலிருந்து புறவாயிற்கதவு வரையில் வந்து கதவு ஒதுக்கத்தி லிருந்துகொண்டு உலாவைக் கவனிக்கின்ருள். தேரும் அவள் விட்டுக்கு நேரே வந்து நிற்கின்றது. தேர்த்தட்டில் அமர்ந்திருக்கும் தென்னவனத் தன் இரு கண்களாலும் குளிர நோக்குகின்ருள், அவன்மீது காதல்கொண்டு தன் உள்ளத்தைப் பறிகொடுக்கின்ருள். சிறிது நேரத்தில் தேரும் அவள் வீட்டைக் கடந்து சென்று விடுகின்றது. ஆயினும், அவள் மனத்தை விட்டுப் பாண்டியன் அகல வில்லை. அவன் மார்பில் அணிந்திருக்த நறுமணமுள்ள மாலைகள் அவளது மணக்கண்ணைவிட்டு மறையவில்லை. அவற்றினிடையே புரண்டுகிடந்த குவளை மலர் மாலே அவளது கவனத்தை அதிகமாக ஈர்த்தலால், அதனை அவளால் மறக்கவே முடியவில்லை. குவளை மலர் கூடப் பாண்டியனின் மார்பினத் தன் வயப்படுத்திக்கொண் டிருக்கின்றதே என்றும், அத்தகைய பேறு தனக்குக் கிட்டவில்லையே என்றும் ஏங்குகின்ருள். மேலும், அவன் கையில் பிடித்திருந்த கூரிய வேலும் தேரில் பூட்டப்பெற்றிருந்த தாவிப் பாயும் குதிரைகளும் அவளது நெஞ்சை விட்டு அகலவில்லை. அன்றிரவு முழுதும் பாண்டி யனின் நினைவாகவே இருக்கின்ருள். இரவு கழிகின்றது. மறுநாள் காலையில் அவள் குளத்திற்கு நீராடச் செல்லுகின்ருள்; அங்கு ஒற்றைத்தாளில் மலர்ந்து நிற்கும் குவளை மலர்களைக் காண் கின்ருள். இப்பொழுது குவளை மலர்கட்குக்கிட்டியுள்ள பேற்றினுக்குக் காரணம் புலளுகின்றது. 'மாரிக் காலத்தில் நீரின் நடுவிலும் கோடை யில் தீயின் நடுவிலும் கின்று தவம் செய்தல் இயல்பு என்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். கார் காலத்தில் நீர் நிலையில் ஒற்றைத்தாளுன்றி கின்று தவம் செய்வதால்தான் இக்குவளை மலர்