பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவிலும் காதல் 8 : இது கைக்கிளை ; தோழிக்குரைத்தது; நெஞ்சொடு கூறலுமாம். விளக்கம் : களியானத் தென்னன் . போர் வெறிகொண்ட யானையை யுடைய பாண்டியன் அளியான் - தண்ணளியால் : அன்புகொண்டு. அளிப் பானே போன்ருன் - காதலிப்பவளுக அருகில் படுத்துக்கொண்டான். என்னே அளியானுயின்ை ஆளுல் அளிப்பானே போன்ருன் என்றும் பொருள் கொள்ளலாம். தெளியாதே கண் மூடியிருந்ததன் காரணமாக ஒன்றுக் தெரியாமல். செங்காந்தள் மெல்விரலால் - செங்காந்தல் அரும்பு போன்ற எனது மெல்லிய விரலால். சேக்கை - படுக்கை. தடவந்தேன் . தடவினேன். என் காண்பேன் என்னலால் யான் - என்னத் தவிர அங்கு வேறு ஒருவரை யும் காண்கிலேன்; என் உடலை யானே தடவிக்கொண்டேனே என்றவாறு, உளவியலார் கூறும் பாலுக்கம் (Sex instinct) கனவிலும் படுத்துகின்ற பாட்டைக் கவிதை நயமாக எடுத்துரைக்கின்றது! (33)