பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[37] இன்னும் என்ன வேண்டுமோ? காதல் வெறி எத்தனையோ விதமாக உருவெடுக்கும். காரண மின்றி மகிழ்ச்சியும் எக்களிப்பும் உண்டாகும் , துயரமும் துன்பமும் தலைகாட்டும் ஆறுதலும் ஆதரவும் தோன்றும் இன்னும், என் னென்னமோ செய்யும். மங்கை யொருத்தி மாறன்மீது மனம் செலுத்தி அவனை கினைந்து நினைந்து ஏங்குகின்ருள். காதல் முற்றிக் கனிந்து விடுகின்றது. தோள்களும் உடலும் வாடி மெலிவடைகின்றன. பாண்டியனுடைய தொடர்பும் அவளுக்குக் கிட்டினபாடில்லை. கிட்டாதாயின் வெட் டெனமற' என்ற முதுமொழியை அவள் தனது வாழ்க்கையில் கைக் கொள்ள முடியாது திண்டாடுகின்ருள். தனது நிலையை கிணைந்து பார்க்கின்ருள். தனக்கு எல்லா நலன்களும் ஏற்பட்டிருந்தும் ஒன்றே ஒன்று குறைவாக உள்ளது என்பதைச் சிந்திக்கின்ருள். தான் ஆறுதல் பெறுவதற்காகத் தன் கிலேயைத் தோழியிடம் இவ்வாறு கூறுகின்ருள்: தோழியே, யான் அணிந்து கொண்டுள்ள எல்லாப் பொருள் களுமே தண்டமிழ் வளர்க்கும் தார்வேந்தன் நாட்டிலுள்ளவையே என் கைகள் அணிந்திருப்பவை பாண்டியனது கடலிலிருந்து எடுக் கப்பெற்ற சங்க வளையல்கள் ; மார்பில் பூண்டுள்ள முத்துமாலையி லுள்ள முத்துக்களும் முத்தமிழ் வளர்த்தானின் கடலிலிருந்து வந்த வையே என் மேனியில் பூசியுள்ள நறுமணச் சந்தனமும் பாண்டிய னுக்குச் சொந்தமான பொதிய மலையில் விளைந்த பொருளே. இவற் றைக் கொண்டே என் தோள்கள் ஆறுதல் பெறலாம். அவையெல் லாம் என்னுடலிலிருந்தும், அவற்றைக் கவனியாமல் வேறு எதனையோ கினைந்து என் தோள்கள் வாடுகின்றனவே. அஃது என்ன வாக இருக்குமோ?' என்கின்ருள்.