பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன பாவம் செய்தேனே? # 5 இது கைக்கிளை , தலைவி தோழிக்குரைப்பது. விளக்கம் : ஓராற்ருல் - எப்படியோ ஒரு வழியாக. என்கண் இடிை பொருந்த சிறிது அளவு உறங்க. உறக்கம் வராமல் கெடு கேரங்கழித்துச் சிறிது வந்தது என்றவாறு கூரார் வேல் மாறன் - கூர்மை பொருந்திய வேலேந்திய பாண்டியன். வாரா வந்து (செய்ய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்). கூரார் வேல் மாறன் வாரா என் கைப்பற்ற என்று கொண்டு கூட்டுக, கனவு விழிப்பு. கல்வினை யொன்றில்லேன் - புண்ணியம் செய்யாத பாவியாகிய யான். கனவும் இழந்திருந்தவாறு - கனவும் என்பதில் உம்மை இழிவு சிறப்பு. கனவின் கிலேயை யொப்பிடும்பொழுது கனவு இழி வாக இருப்பினும் அதனையும் கூடப்பெருமல் இழந்து விட்டேனே என்று வருந்துகின்ருள். இழந்திருந்த - என்பதில் இருந்த என்பது இழந்ததுடன் கில்லாது, விடியுமளவும் உறங்காமல் ஏங்கியிருந்த நிலைமையையும் உணர்த்து கின்றது. - கனவும் இழந்திருந்தவாறு என்ற இறுதியடியில் தலைவியின் ஏக்க பாவம் தொனிக்கின்றது. அந்த அடியைத் திரும்பத் திரும்பப் படித்தால் அது புலகுைம். (48)