பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடை விடு துது t 19 இங்ங்ணம் உலவுங்கால் பருவ மங்கை பாண்டியனைக் கான நேரிடுகின்றது. உடனே அவள் அவன்மீது காதல் கொள்ளுகின்ருள். அழகும் திருவும் அறிவும் கிர ம் பிய அம் மலைத் தலைவனுகிய பாண்டியனைக் கண்டால் யாருக்குத்தான் காதல் உண்டாகாது? பாண்டியனது தோற்றம் முதலியவற்றை அவளால் மறக்கமுடிய வில்லை. தன்னுடைய முகாமிற்குத் திரும்புகின்ருள். உணவின்மீது காட்டம் செல்லவில்லை ; உறக்கமும் கொள்ள இயலவில்லை. வடக் கிருந்து வாடையும் வீசுகின்றது; காதலும் கொழுந்துவிட் டெரிகின் றது. உணர்ச்சி அவளது வசத்திலில்லாததால் வளையல்களும் நெகிழ்ந்து எங்கோ விழுந்து விடுகின்றன. என்ன செய்வாள், பாவம்: ஒரு மரத்தடியில் தனியாகச் சோர்ந்து உட்கார்ந்து கொண்டு ஏங்கிக் கிடக்கின்ருள்: மெய் மறந்திருக்கின்ருள். வாடைக் காற்ருே எலும்பையும் துளைக்கும்படியாக வீசுகின்றது. வாடையின் மோதுதலால் மனம் காதலுலகிலிருந்து இவ்வுலகிற்குத் திரும்புகின்றது. வடகாற்றும் இவளிடத்திலிருந்துதான் பாண்டியன் இருந்த இடத்திற்குப் போகின்றது. காதல் வெறியால் வாடையை நோக்கிப் பேசுகின்ருள் : 'ஓ ! நீயா ? குளிர்வாடாய், வருக. நீ தெற்கு நோக்கிச் செல்லு கின்ருய் அல்லவா? இந்தப் பொதியமலைத் தலைவன் அருகில்தான் முகாம் செய்திருக்கின்ருன், அவனிடம் வைத்த காதலால்தான் என் வளையல்கள் எங்கோ நெகிழ்ந்து விழுந்தன என்று சொல்வாயாக. அவனிடம் குடையும் செங்கோலும் உள்ளன. குடை மக்களைப் பாது காப்பதற்கு அறிகுறி செங்கோல் தீச்செயல்களைச் செய்வோரை ஒறுத்தலுக்கு அடையாளம். உங்களுடைய வல்லமையை ஒன்னு ரிடம் அல்லவா காட்டவேண்டும்? உவந்தாரிடம், அதுவும் ஒரு பெண்ணிடம் காட்டலாமா? இஃது உங்களுடைய குடையின் தண் மைக்கும் செங்கோலின் செம்மைக்கும் தகுமா?’ என்று உரைப்பா யாக " என்கின்ருள்.