பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 20 முத்தொள்ளாயிர விளக்கம் கங்கையின் மன நிலையைக் கவிஞர் இந்தச் சொல்லோவி பத்தில் தருகின்ருர் : மாறடுபேர் மன்னர் மதிக்குடையுஞ் செங்கோலுங் கூறிடுவாய் நீயோ குளிர்வாடாய்--சோறடுவார் ஆரத்தாற் றீமூட்டு மம்பொதியிற் கோமாற்கென் வாரத்தாற் ருேற்றேன் வளை. இது கைக்கிளை; த ல்ே வி வாடையைத் துனது விட்டதைக் கூறுவது. விளக்கம்: மாறு அடுபோர் மன்னர் - பகைவரை வெல்லும்படியாகப் போர் புரியும் வீர மன்னர். பகையைக் கொல்லும் ஆண்மை, அன்பு கொண்ட ஆரணங்கின் வளையல்களைக் கவரலாமா என்ற தொனியினை இச் சொற்ருெடரில் காண்க. அடுதல் - அழித்தல். மதிக்குடையும் செங்கோலும் கூறிடுவாய் - திங்கள் போன்ற வெண்கொற்றக்குடையும் செங்கோலும் அவனிடமிருப்பதை கினேவுகூர்க. ேேயா குளிர் வாடாய் குளிர்வாடாய், நீதாஞ யாரோ என்றல்லவா பார்த்தேன் என்றவாறு, தலைவியின் மனம் கனவுலகிலிருந்து கனவுலகிற்கு வந்து வாடையை உணர்ந்து பேசுவதை இத் தொடர் உணர்த்துகின்றது. சோறு அடுவார் உணவு சமைக்கின்றவர். ஆரத்தால் தீ மூட்டும் சந்தனச் சுள்ளிகளாலும் சிராய்களாலும் அடுப்பு மூட்டும். அம் பொதியில் கோமாற்கு அழகிய பொதியமலைக்கு மன்னனை பாண்டியன் பொருட்டு. வாரம் - அன்பு. தோற்றேன் வளை என் வளையல் களை இழக்க கேர்ந்தது, அவன் பறித்துக்கொண்டது காரணமாக. நான் அவன் மீது அன்பு வைத்திருக்க, அவன் என் வளையல்களை இங்ங்ணம் கவரலாமா என்றவாறு. கங்கையின் பகற்கனவில் (Day-dreaming) எழுந்தது இப் பாடல். கங்கையிடமிருந்து பாண்டியன் வளையல்களைப் பறித்துக் கொண்டுபோனதாக அவள் எண்ணுவது யகற் கனவின்பாற் பட்ட தாகும். பாடலைப் படிக்கும் நம்மையும் அஃது அந்தக் கற்பனை யுலகிற்குக்கொண்டு செல்லுகின்றது. இல்லையா ? (50)