பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளுேடு பிறந்த கங்கை 127 நங்கையின் எண்ண அலைகளைக் காட்டும் கவிஞரின் சொல் லோவியம் இது : - மானுர்க் கடந்த மறவெம்போர் மாறனைக் கானுக்கா லாயிரமுஞ் சொல்லுவேன்-கண்டக்காற் பூனுகந் தாவென்று புல்லப் பெறுவேனுே நானுே டுடன்பிறந்த நான். இது கைக்கிளை , தலைவி நெஞ்சொடு சொல்லுவது. விளக்கம் : மாளுர் . பகைவர். கடந்த - நேர் கின்று பொருது வென்ற, மறம் - வீரம். வெம்போர் - கொடிய போர். மாறன் - பாண்டியன். காணுக் கால் ஆயிரமும் சொல்லுவேன் - அவன் இல்லாத பொழுது எதை எதையோ சொல்லுவேன். பூண் ஆகம் - வைர மாலே அணிந்த மார்பு, புல்லப் பெறு வேகு - தழுவப்பெறுவேனே. புல்லப் பெறுவேனே ? என்ற தொடரில் தலைவியின் ஏக்கம் தொனிக்கின்றது. காணுேடு உடன் பிறந்த நான் ' என்ற இறுதி அடி தலைவியின் இதயம் கரைந்தே போய்விட்டது என்ற பாவத்தை மிக அருமையாய்க் காட்டுகின்றது. பாட்டைப் பாடுங்கால் இவற் றிற்கு அழுத்தங் கொடுத்துப் பாடினல் அவை தெளிவாகப் புலகுைம். (53)