பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[55] இரவு பரும் பாரு! ரு நாள் மாலையில் மாறன் தெருவழியே உலா வருகின்ருன். அவனது மார்பில் வெண்சாந்து பூசியிருக்கின்ருன் : பன்னிறப் பூக் களாலான மாலே அவனது மார்பில் புரள்கின்றது. இக் கோலத்தில் உலா வரும் அவனே நங்கை யொருத்தி காண்கின்ருள்; அவன்மீது மால் கொள்ளுகின்ருள். பாண்டியனும் சிறிது நேரத்தில் அத் தெருவைக் கடந்து சென்று விடுகின்றன். - வேட்கையுடன் வீட்டிற்குள் சென்ற கங்கைக்கு அன்று இரவு சரியாக உறக்கம் வரவில்லை. அவளது கண் வழியாகப் பாண்டியன் உள்ளே புகுந்து அவளது உள்ளத்தில் தங்கியிருக்கும்பொழுது அவளுக்கு எங்ங்ணம் உறக்கம் வரும் கெடுநேரம் உறங்காதிருந்து பலவாறு எண்ணுகின்குள், பிறகு தன் கெஞ்சினிடம் இவ்வாறு சொல்லிக்கொள்ளுகின்ருள் : . ' கெஞ்சமே, இன்று தென்னவன் ஆகத்தை அணய முடியா திருப்போர் பலர் அணைபவரும் சிலர். அணையமுடியா திருப் போருள் யானும் ஒருத்தி, அனேயும் பேறு பெற்றவர்கள் யாவரும், இரவே, கில் ; போய்விடாதே, கீ போய்விட்டால் அவனும் போய் விடுவான்! என்பர். அணையும் வாய்ப்புப் பெருதவர்கள், இரவே, நீ போ விரைவில் விடியட்டும் ' என்பர். இப்படிப் புல்லினவர் மகிழவும், புல்லாதார் வருந்தவும் அவனது மார்பு உள்ளது. ஒரே மார்பு சிலருக்கு இன்பம் ஊட்டுவதாகவும் சிலருக்குத் துன்பம் விளைவிப்ப தாகவும் உள்ளதே. ஒரு பொருள் இரண்டு செயல்கட்குக் காரண மாக உள்ளது சிலர் இரவினை இழுத்துப் பிடிக்கின்றனர்; சிலர் அதனை விரட்டியடிக்கின்றனர். இன்று இரவுபடும் பாடு சொல்லி முடியாது’ என்கின்ருள்.