பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 34. முத்தொள்ளாயிர விளக்கம் கின்றேன். இதற்கிடையில் யான் சோர்வுற்ற காலம் பார்த்து என் னேக் கொல்லப் பார்க்கின்ருயா ? இது தகாது" என்கின்ருள். கங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞருடைய சொல் லோவியம் இது : பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண்பிறந்தா ரேயே உனக்கிங் கிறைக்குடிகள்-நீயோ களிபடுமால் யானைக் கடுமான்றேர்க் கிள்ளி அளியிடை அற்றம்பார்ப் பாய். இது கைக்கிளை; கிள்ளியின் பால் கைக்துருகும் நங்கை வாடை யிடம் கூறுவது. விளக்கம்: பேயோ பேய் போலல்லவா இருக்கின்றது. தண், குளிர்ந்த, வாடாய் - வாடைக் காற்றே. பெண் பிறந்தாரேயோ . பெண் ணுகப் பிறந்தவர்கள்தாமா. இறைக்குடிகள் வரி செலுத்தும் குடிமக்கள், களிபடு மால்யானை - செருக்கு வளர்கின்ற மதயானை. கடுமான் தேர். விரைந்து செல்லும் பரிகள் பூட்டப்பெற்ற தேர். கிள்ளி - சோழன். அளியிடை- அவன் வந்து கூடி அருள் புரிவதற்கு இடையில். அளிஅருள். அற்றம் சோர்ந்திருக்கும் காலம். பெண் பிறந்தாரேயோ உனக்கிங் கிறைக்குடிகள்?' என்ற பகுதியைத் திரும்பத் திரும்பப் பாடினல் கங்கையின் காதல் துடிப் பும் ஏக்க பாவமும் தட்டுப்படுவதை அறியலாம். (29)