பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13; முத்தொள்ளாயிர விளக்கம் நங்கையின் காமம் மிக்க கழிபடர் கிளவியைக் காட்டும் கவி ஞரின் சொல்லோவியம் இது : நாம நெடுவேல் நலங்கிள்ளி சோனுட்டுத் தாமரையு நீலமுந் தைவந்-தியாமத்து வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய் பண்டன்று பட்டினங் காப்பு * இது கைக்கிளை , வனிதை வாடையை அச்சுறுத்துவது. விளக்கம் : காம நெடுவேல் - அச்சக்தரும் நீண்ட வேலைத் தாங்கிய. காமம் . அச்சம். சோணுட்டு - சோழநாட்டிலுள்ள, கீலம் - குவளை மலர். தை வந்து . மேல்ல மெல்லத் தடவி, யாமத்து - கள்ளிரவில். வாரல் - வராதே. பனிவாடாய் . குளிர்ந்த வாடையே, பண்டன்று . முன்னைய காலம் அல்ல இது: (அப்பொழுது ககரம் காவலின்றி இருந்தது). பட்டினம் காப்பு - இப்பொழுது பட்டினம் காவலில் இருக்கின்றது. வாடையுடன் பேசுவதும் வண்டு வந்துப் போனதாகச் சொல்லு வதும் காதல் களிமயக்கில். காதல் இதையும் பேசச் செய்யும் ; இன்னமும் பேசச் செய்யும், பகலே புறப்பட்ட வண்டு தாமரையை யும் குவளையையும் தைவந்து தாமதித்து யாமத்தில் வந்ததைப் போலவே, கிள்ளியும் உரிமை மகளிரையும் பிறமகளிரையும் ஏமாற்றி விட்டு யாமத்திற்குப் பிறகு இங்கு வருவான் என்பது குறிப்பு. (30)

  • நெய்க்குடத் தைப்பற்றி ஏறும்

எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் ! காலம்பெற உய்யப் போமின் : மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானுர் கிடந்தார் ; பைக்கொண்ட பாம்பு அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே. என்ற பெரியாழ்வார் திருமொழியிலும் (5 ; 2 - 1) இதனையடுத்துவரும் இப்பதிகப் பாசுரங்களனைத்திலும் ஈற்றடிகளில் பண்டன்று பட்டினங் காப்பு என்ற சொற்றுெடர் வருதல் கண்டு மகிழ்க, { ப - வே. 12. பணிவாடை,