பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[2] பாண்டியநாட்டின் வனம் த்தமிழை வளர்த்த பாண்டியநாடு முத்துக்களுக்குப் பெயர் போனதென்பது உலகறிந்த செய்தி. தென்னுடு முத்துடைத்து என்று இலக்கியமும் கூறுகின்றதல்லவா? இன்று துத்துக்குடியில் முத்துக்குளித்தல் நடை பெற்று வருவதைக் காண்கின்ருேம், பருவகாலத்தில் செய்தித்தாள்களில் இச் செய்தி வெளியாவதைப் பல இரத்தின வணிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதைக் காணத் தான் செய்கின்ருேம். இன்று திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கொற்கை என்னும் கடல்துறைப் பட்டினம் அக்காலத்தில் சிறந்த துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்தது. மேற்கே உரோமாபுரி முதல் கிழக்கே சீனம் வரையிலும் அந்தப் பட்டினம் வாணிகத் தொடர்பு பெற்றிருந்தது. அந்தக் காலத்தில் கொற்கையில் முத்துக்குளித்தலும் கடை பெற்று வந்தது. வேறு நாடுகளில் முத்துபற்றிய பேச்சு வரும்பொழு தெல்லாம் பாண்டியனைப்பற்றிய பேச்சும் சேர்ந்தே வரும் ; பாண்டிய நாடும் சேர்ந்தே பேசப்பெறும், முத்து வளங்காரணமாகப் பாண்டிய காட்டிற்கும் பாண்டியனுக்கும் தனித்த புகழ் இருந்து வந்தது. நாம் வாயில் வைத்து ஊதும் சங்கு கடலில் வாழும் ஒரு பிராணி யின் உடல் : சிப்பி என வழங்கப்பெறுவது. சங்கு என்ற இந்தப் பிராணி நத்தை இனத்தைச் சேர்ந்தது. இதற்கு கந்து என்ற பெயரும் உண்டு. பண்டைய இலக்கியங்களில் கந்து என்றே வழங்கி வருகின்றது. ஆளுல் இது நத்தையைவிடப் பன்மடங்கு பெரியது. கடலில் காணப்பெறும் இது மணலில் ஊர்ந்து செல்லும் , செல்லும்போதே முட்டைகளை இட்டுக்கொண்டேபோகும். சாதாரண மாக ஒரு சங்கு இருபது முப்பது முட்டைகளை இடும் என்று அறிந்த வர்கள் சொல்லுகின்றனர். முட்டைகள் மிளகுப் பருமனுள்ளவை; வெண்ணிறத்தவை.