பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[16] வீரத்திற்கு முன்னர் சோகம் ஒரு சமயம் திறை கட்ட மறுத்த அரசர்களுள் சிலர் தென்ன வனை ங்ந்து எதிர்க்கின்றனர். போர் கடுமையாக நடைபெறுகின்றது. எம்மருங்கு நோக்கினும் விர வுணர்ச்சி பொங்கி வழிகின்றது. பகை வர்களும் அதி மும்முரமாகப் போர் புரிகின்றனர். நெளிந்த புருவமும் சிவந்த கண்ணும் கடித்த எயிறும் மடித்த உதடும் சுருட்டிய நுதலும் கொண்டவராகக் கையில் அயில் வேலுடன் அவர்கள் பாண்டியப் படைகளை எதிர்க்கின்றனர். இங்கிலையில் பாண்டியனது வேற்படை யினர் மீதுர்க்து வந்து மாற்ருர் படையினர்மீது வேலோச்சி விடு கின்றனர். வேலேற்ற மாற்ருர் அனைவரும் அருகில் வெட்டுண்டு கிடக்கும் யானைகளின்மீது சாய்ந்து விடுகின்றனர். இத்துடன் போரும் முடிவுபெருகின்றது. பாண்டியன் களங் காண வந்துகொண்டிருக்கின்றன். களத் தில் ஒரு காட்சி அவன் கண்ணில் படுகின்றது. மாற்ருர் பக்கத்தில் வேற்படை தாங்கி வந்த வீரன் ஒருவன் பழுதுபட்ட விழிகளுடன் பக்கத்தில் வெட்டுண்டு கிடக்கும் களிற்றியானையின்மீது சாய்ந்து கிடக்கின்றன். அவன் வெஞ்சமர் புரிய வெஞ்சினத்துடன் வாய் மடித்த நிலையில், சிவந்த கண்களுடனும் மேலேறிய இமைகளுடனும் மேலேறி வந்த பொழுது தென்னவன் படைவீரனல் கொல்லப்பட்ட வன். இச் சோகக் காட்சியைக் காணும் பாண்டியனின் மனம் நிலை குலைகின்றது; நெஞ்சம் விம்முகின்றது. அந்த வீரன் கையிலே தாங்கியிருந்த ஒச்சும் நிலையிலுள்ள வேலைக் கண்டு, வென்றி லேன், வென்றிலேன் என்று ஓலமிட்ட நிலையில் கிற்கின்றன். கலிங்கப் போருக்குப் பின்னர் அசோகருக்கு ஏற்பட்ட மனநிலை பாண்டியனுக்கும் வந்து விடுகின்றது. இதைத்தான் கவிஞர் தம் சொல்லோவியத்தால் நமக்கு அறிவிக்கின்ருர். . -