பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[24] இனப் பற்று ! பண்டைக்காலத்தில் சங்கில்ை வளையல்களைச் செய்வது வழக் கம். இன்றும் இராமேச்சுவரம், கன்னியாகுமரி போன்ற இடங் களில் இத்தகைய சங்கு வளையல்கள் விற்கப்பெறுவதையும் யாத்திரி கர்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி அணிந்து கொள்வதையும் நாம் காணலாம். சங்குகளே வட்டம் வட்டமாக அறுத்து, அவற்றின் மீது செதுக்கு வேலைகளையும் செய்துள்ள வளையல்களை மகளிர் ஆர் வத்துடன் அணிந்துகொள்வர். இந்த வளையல்கள் கையில் இளக்க மாகவே இருக்கும்; இறுக்கமாக இரா. இவற்றை மிக்கக் கவனத் துடன் போற்றிப் பாதுகாத்தல்வேண்டும். சற்று மெய்மறந்திருப்பின், அவை கீழே விழுந்து உடைந்துவிடும். இராமேச்சுவரத்திலிருந்து திரும்பும் சில யாத்திரிகர்கள் இத்தகைய வளையல்களை அணிந்து கொண்டுவந்த பழக்கம் இராமையில்ை புகைவண்டிகளிலேயே உடைத்து விடுவதையும் அதஞல் அவர்கள் முகத்தில் அசடு தட்டு வதையும் நாம் காணலாம். வைகைக்கு நீராடச் சென்ற நங்கையொருத்தி வைகைக் கரை யில் வழுதியைக் காண நேரிடுகின்றது. அவன்மீது காதல் கொள்ளு கின்ருள். பாண்டியனே அவளைப் பார்க்கவும் இல்லை ; அவளை விரும்பவும் இல்லை. ஆனல், இவள் அவன் தன்னை விரும்பினதாக கினைத்துக்கொண்டு காதலால் வாடுகின்ருள். தோள்கள் மெலி கின்றன. அவள் கையில் அணிந்திருந்த சங்கு வளையல்கள் கழன்று கீழே விழுந்து உடையத்தக்க கிலேயிலுள்ளன. இந்த நிலையில் அவள் வீட்டிலிருக்கின்ருள். பாண்டியன் உலாப் புறப்படுகின்ருன். அவனது வருகையைச் சங்கொலி அறிவிக்கின்றது. அந்த வலம்புரிச்சங்க முழக்கம் காதில் பட்டவுடன் நங்கைக்கு உடல் சிலிர்க்கின்றது. உடலும் உள்ளமும் பூரிக்கின்றன. பாண்டியனே தன்னருகில் வந்து விட்டதாகக் களிப் படைகின்ருள். கைகள் உப்புவதால் கழன்ற நிலையிலிருந்த வளையல் களும் கழலாமல் தடைப்பட்டுகின்று விடுகின்றன. இவ்வாறு கழலாத நிலை எங்ங்னம் தன்னிடம் ஏற்பட்டது என்று சிந்திக்கின்ருள் நங்கை,