பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[25] தச்சனை வாழ்த்தும் தையல் அந்தக் காலத்தில் கதவுகளுக்கு மரக்கட்டையினுல்தான தாள அமைப்பது வழக்கம். அந்தத் தாளின்கீழ் ஒரு பெரிய வட்டமான துளை இருக்கும். அந்தத் துளை வழியாகத்தான் ஒருவளைந்த இரும்பை விட்டு மரத்தாளைத் தள்ளித் திறப்பர். இத்தகைய அமைப்பினை இன்றும் சிற்றுார்களிலுள்ள பழைய வீடுகளில் காணலாம். செவிலித்தாய் ஒருத்தி பருவம்.கிரம்பின தன் மகள் பாண்டியனின் எழில் நலத்தைக் காணின், அவள்கைந்துருகி நலன் அழிவள் என்று கருதுகின்ருள். ஒரு நாள் பாண்டியன் உலா வரும் செய்தி அவள் காதுக்கு எட்டுகின்றது. உடனே ஓடோடி வந்து தன் மகளை உள்ளே இருக்கச் செய்து கதவுகளை அடைத்துத் தாளிட்டு வெளியே சென்று விடுகின்ருள். என்ன செய்வாள் அந்தப் பெண்? இனி எப்படி அவள் வழுதியைக் காணமுடியும்? நமக்கே அவள்மீது இரக்கம் பிறக்கின்ற தல்லவா ? தாளிட்ட கதவை உற்று நோக்குகின்ருள் கங்கை. ஒரு பெரிய துளை அதில் தெரிகின்றது. அவள் எல்லையற்ற இன்பத்தில் திளைக் கின்ருள். சிறிது நேரத்திற்குள் தென்னவனும் அவளது வீட்டிற்கு நேராக வந்து விடுகின்றன். கதவின் துளை வழியாகக் காவலனின் எழில் கலத்தைக் கண்டுகளிக்கின்ருள் காரிகை. தனக்காகத்தான் தாளினே அமைத்த தச்சன் துளையையும் வைத்துப் போயினன்போலும் என்று அவனை வாழ்த்துகின்ருள் அத்தையல். காலத்தினுற் செய்த இந் நன்றிக்குத் தான் என்ன கைம்மாறு செய்யமுடியும்? ஞாலமுழு வதும் கொடுத்தாலும் இவ்வுதவிக்குச் சாலாதே என்று எண்ணு கின்ருள் அந்த கங்கை. து நேரத்திற்கெல்லாம் அவளது தோழி கதவைத் தட்டு கங்கை உள்ளிருந்து கொண்டு தன் அன்னை செய்த த்ெ துளையின் வழியாகத் த ன் னுட ன் பேசுமாறு காழியும் துளையின் வழியாக கங்கையைக் கண்டு