பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தச்சனை வாழ்த்தும் தையல் 8 'தோழி, சிறைக்குள் அடைப்பட்ட மான்போ லானேன். ஆயின், இக்கதவினைச் செய்த தச்சன் எனக்கு ஒரு வழியமைத்துத் தந்துள் ளான். இதன்மூலம் உன்னைக் காணமுடிகின்றது. சற்று கேரத் திற்குமுன்னர் காவலனையும் இதன் மூலம்தான் கண்டு மகிழ்ந்தேன்' என்கின்ருள் நங்கை. இந் நிகழ்ச்சியினைக் காட்டும் கவிஞரின் பாடல் இது: காப்படங்கென் றன்னே கடிமனை யிற்செறித் தியாப்படங்க வோடி யடைத்தபின்-மாக்கடுங்கோன் நன்னலங் காணக் கதவந் துளைதொட்டார்க் கென்னகொல் கைம்மா றினி. இது கைக்கிளை தலைவி தோழியிடம் கூறுவது. விளக்கம் : காப்பு அடங்கு - எம் காவலுக்கு அடங்கு; இது வெளியே செல்லக்கூடாது என்று அன்னை தன் மகளுக்குப் பிறப்பிக்கும் கட்டளை. கடி மனை - பாதுகாப்பான வீடு. இற்செறித்து வீட்டிற்குள் இருத்தி. இற்செறித் தல் என்பது, அகப்பொருளில் ஒரு துறை, வயது வந்த தன் மகளை அன்னை இங்குப் போகக்கூடாது. அங்குச் செல்லக்கூடாது ' என்று கெடு பிடி செய்யும் கிலையை அகப்பொருள் இலக்கணம் இற்செறிப்பு என்று குறிப்பிடும். யாப்பு அடங்க . (கதவுகளின் விளிம்பு) இசைப்புப் பொருந்த, ஓடி அடைத்தபின் அவசர அவசரமாக ஓடி அடைத்தபின்னர். மாக்கடுங் கோன் - பாண்டியன் ; இது பாண்டியனுக்குரிய பெயர்களுள் ஒன்று. கன் னலம் - சிறந்த அழகு. துளை தொட்டார் - துளையை அமைத்தவர். கதவிலுள்ள துளை கதவுகளைத் திறப்பதற்கும் மூடுவதற்கும் வாய்ப்பாக அமைக்கப்பெற்றது. ஆனால், கங்கை தன் பொருட்டே தச்சன் அத்துளையை அமைத்ததாக எண்ணுகின்ருள். தாய் அடைப்பாள், மகள் பார்ப்பதற்கு வழி வேண்டுமே ' என்று தச்சன் முன்யோசனையுடன் துளையை அமைத்ததாக மயக்கம். என்ன கொல் கைம்மாறிணி ? என்பதில் கங்கையின் எக்களிப்பு பாய்ந்துகொண்டு வருகின்றது. கவிதை அனுபவம் கிறைந்த பாடல் இது. (24) (பா - வே.) 2 றென்ன.