பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[26; இரக்கம் வேண்டும்! 彝 றுவர்களின் விளையாட்டில் தோன்றும் ஒருவிதக் கற்பனையைப் பாவனே (Make-believe) என்று வழங்குவர் உளவியலார். சிறுவர்க ளது விளையாட்டில் நாற்காலி கப்பலாகும் : செங்கற் பொடி வெடி மருந்தாகும் , ஊசற் பலகை புகை வண்டியாகும் ; கோல் தானியங்கி ஆகும். அவர்களது விளையாட்டில் விலங்குகளும் பேசும். அவர்கள் மரம்பாச்சியை வைத்துக்கொண்டு அதனிடம் அதிக நேரம் இல்லா ததும் பொல்லாததுமான பேச்சினேப் பேசிக்கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கின்ருேம். இத்தகைய பாவனை ஆற்றல் பருவமடைந்த மகளிரிடத்தும் இருத்தல் உண்மை. இத்துடன் காதல் வெறியோ பக்தி வெறியோ கலந்து விட்டால் பேச்சின் வேகத்தைப்பற்றி நாம் எடுத்தியம்பவேண்டியதில்லை. பக்தி வெறியில் திளைத்த ஆண்டா ளின் பாக்களில் இத்தகைய பாவனை நிரம்பிய பாக்கள் பலவற்றைக் காண்கின்ருே மல்லவா? ஒரு நாள் மாறன் உலா வருகின்ருன். மதம் கிறைந்த களிற்றி யானையின்மீது வருதலினும் பிடியின்மீது வருதல் நன்றென்று கருதி அதன்மீது ஏறி வருகின்றன். வழுதியின் உலாவினைக்காணும் நங்கை யொருத்தி அவன்மீது ஆராக்காதல் கொண்டுவிடுகின்ருள். யானை யின் அழகிய நடையும், அதன்மீது இவர்ந்து வந்த அரசனது கம்பீர மான தோற்றமும் அவளது மனத்தை விட்டு அகலவில்லை. அரசனது உருவம் அவளது உள்ளத்தில் இடம் பெற்றது வியப்பு அன்று; அவன் ஏறிவந்த யானையின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் அப்படி அப்படியே அவளது மனத்தில் கிற்கின்றன ; அவற்றில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விடுகின்ருள். 'யானையின் கால் உடுக் கையைப் போலல்லவா இருக்கின்றது ! செவியோ தோலினுற் செய்த கேடயம்போல் இருக்கின்றது. துதிக்கை கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் முறையில் எப்படி யெல்லாமோ ஆடுகின்றது. வாய் தொங்குகின்ற அழகோ தனிச் சிறப்புடையது!’ என்றெல்லாம் யானையைக் கண்டு அனுபவிக்கின்ருள்.