பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரக்கம் வேண்டும்! む3 மறுநாள் இந்த கங்கை நீராடப்போயிருந்த இடத்திற்கு அந்த யானை வந்திருந்தது. அரசனும் நீராட வந்திருந்தான். அப்போது அந்த யானையை நோக்கி ஏதோ கூற எண்ணுகின்ருள். சற்றுத் தடுமாற்றத்தில் வாய்பேசாதுவாளா கிற்கின்ருள் , பிறகு சொல்லியே விடுகின்ருள். யானையே, நறுமணம் கமழும் மாலையை அணிந்து கொண்டு சந்தனம் பூசிய மன்னனைத் தாங்கி எம் வீதிப்பக்கம் வரு வாயல்லவா ? அப்போது எம் வீட்டுச் சாளரத்தை ஒட்டி கடந்து செல்வாயாக அப்போதுதான் அவன் என்னைப் பார்ப்பான்; நான் மகிழ்வேன். நீ என்ன யொத்த பெண்பால் ஆயிற்றே என்றுதான் இதை உன்னிடம் சொல்லுகின்றேன். என்மீது இரக்கம் காட்டு வாயாக!' என்று கூறுகின்ருள் அவள். தான் சொல்லுவது யானைக்குப்புரியுமா என்றும், புரிந்துகொண்டு அது தன் விருப்பத்தினை கிறைவேற்றுமா என்றும் அவள் கினைத்துப்பார்க்கவில்லை. காதல் வெறி அவளது கினைவை மறைத்து விடுகின்றது. அரசனைத் தன் கண்குளிரப் பார்த்து விடவேண்டும் என்ற துடிப்பு அப்படி இருக் கின்றது அவளுக்கு. மேற்குறிப்பிட்ட மகளின் மன நிலையைக் கவிஞர் காட்டும் சொற்படம் இது : துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப் பிடியேயா னின்னே யிரப்பல்-கடிகமழ்தார்ச் சேலேக வண்ணனுெடு சேரி புகுதலுமெஞ் சாலேகஞ் சார நட. இது கைக்கின: தலைவி பிடியை நோக்கிப் பேசுவது. விளக்கம் : துடி உடுக்கை தோல் - கேடகம், தூங்குகை தொங் கும் தும்பிக்கை. நால்வாய் - தொங்கும் வாய். நாலுதல் தொங்குதல். பிடி - பெண்யானை, இரப்பல் - வேண்டுகின்றேன்; கெஞ்சிக்கேட்டுக்கொள்ளு கின்றேன் என்றவாறு கடிகமழ்தார் - மணம் கமழும் மாலை. சேலேக வண் (பா வே. 7. யிரப்பன் ; 12. புகுதலுமே.