பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முத்தொள்ளாயிர விளக்கம் விளக்கம் : எலா அ - தோழி; இது தோழியை விளிக்கும் முன் னிலப் பெயர். டைப்பிடியே - இளம் பெண்யானையே. கூடற்கோமான் - மது ரைக்கு மன்னன். புலால் கெடு கல் வேல் மாறன் - மாமிசம் தோய்ந்த நீண்ட கல்ல வேலை ஏந்திய பாண்டியன். உலாங்கால் - உலாவ வரும் பொழுது. பைய மெல்ல ; மெதுவாக தேற்ருயால் - தெளியாமல் இருக் கின்ருய், ஆல் - அசை, பெண்ணுகப் பிறந்தவள் மெல்ல நடக்க வேண்டும் என்பதைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றயே என்றவாறு, பெண்மை - பெண்தன்மை. ஐயப்படுவதுடைத்து - சந்தேகிக்கும் தன்மை யுடையது. யானை மெல்ல கடந்து சென்ருல்தான், மாறனது அழகைக் கன் குளிரக் காணலாமே என்பது கங்கையின் நோக்கம். பாட்டினுள்ள எலா அ, புலா அல், உலாஅங்கால் என்ற மூன்று அளபெடைகளும் பெண் யானை மெல்லப்போகவேண்டு மென்ற நங்கையின் விருப்பத்தைத் தொனிக்கச் செய்கின்றன. இது தொனிப்பொருள் கிறைந்த அரிய பாடல். (26)