பக்கம்:முந்நீர் விழா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முந்நீர் விழா

2

 அவன் ஆயத்தமாக இருந்தான். இரு படைகளுக்கும் கடுமையான போர் மூண்டது. பாண்டிய வீரர் தம்முடைய ஆற்றலின் முழுப் பகுதியையும் காட்ட வேண்டிய சந்தர்ப்பங்கள் நேர்ந்தன. இரண்டு மூன்று நாட்களுக்குள் இந்தப் படையை வென்று விடலாம் என்று நெடியோன் நினைத்தான். ஆனால் தெங்க நாட்டரசன் எங்கிருந்தோ புதிய புதிய படையை வரு வித்தான். சரியாக ஏழு நாட்கள் போர் நிகழ்ந்தது. தென் கடல் நீர் எளிதிலே கிடைப்பதன்று என்ற உணர்வு பாண்டிய மன்னனுக்கு உண்டாயிற்று. அதனுடன் மான உணர்ச்சியும் தலையெடுத்தது. பின்னும் வீறுகொண்டு போர் செய்தான். ஏழாவது நாள்தான் வெற்றியைக் காண முடிந்தது.

அரிதிலே கிடைத்த வெற்றி ஆதலின் அதன் மதிப்பு மிகுதியாகத் தோன்றியது. மேலே பாலைநாடு, குன்ற நாடு, காரை நாடு, குறும்பனை நாடு என்ற நாடு களைத் தாண்டித் தென்கடலை அடையவேண்டும். மாகீர்த்தி முன்பே தக்க வண்ணம் ஆராய்ந்தே இந்தப் போரை மேற்கொண்டான். போரின் தொடக்கமே கடுமையாக இருந்தது; அதனால் படை வீரர்கள் தம் முடைய முழு ஆற்றலேயும் காட்டினால்தான் இந்தப் போரில் வெற்றி பெற்று மீள முடியும் என்று தெரிந்து கொண்டார்கள். அவர்களுடைய விறல் முந்தியது.

தெங்க நாட்டரசனை அடிப்படுத்தி, அவன் தந்த திறைகளைப் பெற்றுக்கொண்டு, நெடியோன் மேற் கொண்டு தன் போர்ப் பயணத்தைத் தொடங்கினான். அடுத்த நாட்டரசனைத் தெங்க நாட்டில் செய்தது போலக் கடுஞ் சமர் செய்யாமலே எளிதில் மடக்கினான். பின் சில மன்னர் அஞ்சி வந்து அடிவீழ்ந்தனர். எஞ்சிய சிலரைப் போரிட்டு அடக்கினான். சில மன்னர் போரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/16&oldid=1214699" இலிருந்து மீள்விக்கப்பட்டது