பக்கம்:முந்நீர் விழா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

முந்நீர் விழா


பார்க்க விரும்பி ஒரு நாள் அவர் ஊருக்குச் சென்றார். ஊருக்குள்ளே நடந்து வரும்போது பல பெரிய மாளிகைகளைக் கண்டார். 'இந்த மாளிகைகளில் ஒன்றில்தானே அவர் வாழ்கிறார்?' என்று உடன் வந்த வர்களை ஒளவையார் கேட்டார்.

'இல்லை; அவர் சிறிய வீட்டில் வாழ்கிறார். இந்த மாளிகைகளில் வாழ்கிறவர்கள் அவரைக் காட்டிலும் பெரிய செல்வர்கள்' என்றார்கள் அவர்கள் .

இந்த ஊரில் இவ்வளவு பெரிய செல்வர்கள் இருக்கிருர்கள் என்று யாரும் சொல்லவில்லையே! என்றார் தமிழ் மூதாட்டியார். அதற்கு விடை ஒன்றும் யாரும் கூறவில்லை.

ஒளவையார் வேளாண் செல்வர் வீட்டுக்குப் போனார். அவர் வருவதை அறிந்த அவர் எதிர்கொண்டழைத்து உபசாரம் செய்தார். பாட்டி தனியாகவா வருவார்? அவருடன் வேறு சில புலவர்களும் வந்திருந்தார்கள். 'பாட்டி வாயிலிருந்து எந்தச் சமயத்தில் என்ன முத்து உதிருமோ? அதை உடனே பொறுக்கிக் கொள்ளவேண்டும் என்று மிகுந்த ஆவலோடு அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த உபகாரி யாவரையும் அமரச் செய்து உப சாரம் செய்து விருந்து அளித்தார். அவர் இட்ட விருந்தும் பேசிய பேச்சும் இனியனவாக இருந்தன. ஊரில் உள்ள பலர் ஒளவையாரைப் பார்க்க வந்து விட்டார்கள்.

எல்லோரும் உணவு உண்டு அமர்ந்திருந்தார்கள். அப்போது அந்த ஊர்க்காரராகிய பெரியவர் ஒருவர் ஒளவையாரை நோக்கி, "ஒரு விண்ணப்பம்' என்றார்,

"என்ன, சொல்லுங்கள்?' என்றார் ஒளவையார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/31&oldid=1214751" இலிருந்து மீள்விக்கப்பட்டது