பக்கம்:முந்நீர் விழா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூவம் தியாக சமுத்திரம்

33


மன்னர்களிடமும், வேறு செல்வர்களிடமும் பரிசு பெற்றவர்களும் நாராயணரிடம் பரிசு பெறுவதை மதிப்பாகக் கருதினார்கள். இவ்வாறு செய்து வந்தமையால் அவருடைய புகழ் எங்கும் பரவியது. ஒரு புலவர் கூவத்தைச் சிறப்பித்துப் பாடுகையில் அந்தப் பொற்கொல்லரையும் பாராட்டினார்.

மட்டாருஞ் செங்கழு நீர்மணி
மார்பரை வாழ்த்தும் அந்தக்
கிட்டாத யாசகர் கிட்டிவங்
தால் அதைக் கேட்டுமுன்னாள்
பட்டோலை வாசித் தவரவர்க்
குள்ள பரிசிலெல்லாம்
தட்டான் அளிப்பதும் கூவம்
தியாக சமுத்திரமே.

(மட்டு-தேன். செங்கழுநீர் மணி மார்பர்-செங்கழு நீர் மாலேயை யணிந்த அழகிய மார்பையுடைய மன்னர்கள். கிட்டாத யாசகர்-யாரிடத்திலும் சென்று பரிசில் பெறாத அரிய புலவர்கள். அதை-அவர் பாடும் பாடலை.)

ரு முறை அந்த ஊருக்கு ஒருவர் வந்தார். அந்த ஊரின் பெயரைக் கேட்டார். கூவம் என்பதற்குக் கிணறு என்று பொருள். "இந்த ஊரின் பெயர் முரண்பாடுடையதாக இருக்கிறது. கிணறு எங்கே, சமுத்திரம் எங்கே? கூவம் என்பது கிணறு. அதை எப்படிச் சமுத்திரம் என்று சொல்வது? கூவம் தியாகசமுத்திரம் என்று இணைத்துச் சொல்வது பொருத்தமாக இல்லையே!” என்ருர்.

அவ்வூரில் உள்ள அறிஞர் ஒருவர் அவருக்கு விடை கூறினர். இது சிறிய ஊராக இருந்தாலும் புகழால் பெரியது. தியாகத்தால் பெரியது. அதனால் வெறும்

மு. நீ-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/42&oldid=1214766" இலிருந்து மீள்விக்கப்பட்டது