பக்கம்:முந்நீர் விழா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

முந்நீர் விழா

 அவள் அழுகிறாள். பாட்டைச் சொல்லிக்கொண்டே அழுகிறாள். பாட்டே அழுகை; அழுகையே பாட்டாக அல்லவா வருகிறது?

மாகுன் றனையபொற் ருேளான்
வழுதிமன் வான்கரும்பின்
பாகென்ற சொல்லியைப் பார்த்துஎன்னைப்
பார்த்திலன்; பையப்பையப்
போகின்ற புள்ளினங் காள்புழற்
கோட்டம் புகுவதுண்டேல்
சாகின் றனள்என்று சொல்லீர்,
அயன்றைச் சடையனுக்கே!

பாட்டுத் தெளிவாகக் காதில் விழுகிறது. பாண்டியன் பேர் அதில் வருகிறது. 'மாகுன்றனைய பொற்றோளான் வழுதிமன்' என்று சொல்கிறாள். பிறகு? பாண்டியன் நன்றாகக் கவனித்தான். பாட்டை மீட்டும் அவள் சொல்கிறாள்; நிறுத்தித்தான் சொல்கிறாள்; யாரோ அயன்றைச் சடையனாமே! அவன் பேர் அல்லவா பாட்டில் வருகிறது? அவள் காதலனோ அவன்?

பாண்டியனுக்கு இப்போது விச்சுளிப் பாய்ச்சல் மறந்து போயிற்று. அவள் பாடும் பாட்டில் ஈடுபட்டுப் போனான். அந்தப் பெண்ணின் அழுகுரல் அவன் உள்ளத்தை உருக்கியது.

"ஏ பெண்ணே, ஏன் அழுகிறாய்? இந்தப் பாட்டை ஏன் பாடுகிறாய்? இது யார் பாடியது?”

இப்போதும் தந்தைதான் விடை கூறினான். 'இவனுடைய துக்கந்தான் பாட்டாக வருகிறது. பெருமானே. அயன்றைச் சடையனார் எங்களைக் காப்பாற்றும் தெய்வம். அயனம் பாக்கத்தில் உள்ள வேளாண் செல்வர். அவருடைய அன்பை நினைத்துப் புலம்புகிறாள்' என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/55&oldid=1207524" இலிருந்து மீள்விக்கப்பட்டது