பக்கம்:முந்நீர் விழா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விச்சுளிப் பாய்ச்சல்

49

 மாக வைத்துக் கொண்டிருக்கிறோம். வேறு வகையான ஆட்டங்களை எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதுவோ அத்தகையது அன்று. இந்த விச்சுளிப் பாய்ச்சலில் வல்லவர்களாக இரண்டு மூன்று குடும்பத்தினரே இருக்கிறார்கள். இந்தக் கலையும் காப்பாற்றப்பட வேண்டியது தானே?” என்றான் அவன்.

"அந்தத் தொழிலை இவளுக்குக் கற்றுத் தருவானேன்?' என்று கேட்டார் சடையனார்.

"எங்கள் குலத்தில் சோம்பேறியாக யாரும் இருக்கக்கூடாது. கணவன் கழைக்கூத்து ஆடினால் மனைவியும் ஆடவேண்டும்; இல்லையானல், முரசையாவது அடிக்க வேண்டும். பெரும்பாலும் கல்யாணம் ஆகிறவரைக்கும் பெண்கள் கம்பத்தின்மீது ஏறி ஆடுவார்கள். எங்ககளுக்குப் பொருள் வருவாய் தரும் தொழில் இது. நாங்கள் பிச்சை வாங்கவில்லையே!”

சடையனாருக்கு மேலே கேள்வி கேட்க விருப்பம் இல்லை. 'இந்த இளம் பெண் இப்படியெல்லாம் ஆடும் படி இருக்கிறதே!' என்ற இரக்கத்தால் அவர் கேட்டார். அது அவர்கள் குலத்தொழில் என்று தெரிந்துகொண்ட பிறகு அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனாலும் ஒரு பரிவு அவர் உள்ளத்தில் இருந்து வந்தது.

பேச்சுவாக்கில், "இவள் தமிழ் நூல்களையும் படித்திருக்கிறாள்" என்றான் கழைக்கூத்தன்.

'அப்படியா! என்ன என்ன நூல்களைப் படித்தாள்? யாரிடம் பாடம் கேட்டாள்?' என்று கேட்டார் வள்ளல்.

"எங்கள் ஊரில் ஒரு புலவர் இருக்கிறார். அவரிடம் சில காலமாகப் பாடம் கேட்டாள். கவியும் பாடுவாள். அந்தப் புலவர்கூட இவளைக் கழைக்கூத்தாட வேண்டாம் என்று சொன்னார். வெறும் கவி சோறு போடுமா?"

முத்-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/58&oldid=1207533" இலிருந்து மீள்விக்கப்பட்டது