பக்கம்:முந்நீர் விழா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞனும் செழியனும்

63

புலவர்கள் தம்முடைய பெருமைகளைச் சொல்லிக் கொள்வது தவறாகாது.

ஏடா யிரங்கோடி எழுதாது தன்மனத்
தெழுதிப் படித்த விரகன்
எதுசொலினும் அதுவே எனச் சொலும் கவிவீர
ராகவன் விடுக்கும் ஒலை.

பிறகு செழியனுடைய புகழைச் சொன்னார். அவன் ஆதிசேஷனும் சிரமசைக்கும் கலைஞன் என்றும், கங்கா குலமாகிய வேளாளர் குலத்தில் உதித்தவன் என்றும், தாகம் தீர்த்தவன் என்றும் பாடினர்.

சேடாதி பன்சிரம் அசைக்கும் கலாகரன்
திரிபதகை குலசேகரன்
தென்பாலை சேலம் செனித்ததா கந்தீர்த்த
செழியன்எதிர் கொண்டு காண்க.

(சேடாதிபன் - ஆதிசேஷன். திரிபதகை - கங்கை, தென் பாலை - நீர் இல்லாமல் பாலையாகிப் போன இடம்.)

பிறகு தமக்குக் குதிரை வேண்டுமென்பதைச் சமற்காரமாகத் தெரிவித்தார். குதிரைக்கு நிகண்டில் எத்தனை பேர் உண்டோ, அத்தனையையும் அடுக்கினார். அந்தச் சொற்களுக்கு வேறு பொருள் இருந்தாலும் அவை அல்ல என்று கூறி, குதிரை என்பதைக் குறிப்பித்தார். கந்தருவம் என்பதற்கு இசையென்றும் குதிரை யென்றும் பொருள் உண்டு. குதிரை என்பதைத் தெளிவாக்க, 'பாடாத கந்தருவம்' என்றார் இப்படியே பந்து அன்று என்று தெரிவிக்க, 'எறியாத கந்துகம்' என்றார். மூலையாகிய கோணம் அன்று. குதிரை என்று காட்ட, 'பத்தி கோணாத கோணம் ' என்றார். இப்படியே பறக்கும் கொக்கை விலக்கி, 'பறவாத கொக்கு ' என்றும், கோடைக் காலத்தை விலக்கி, ‘அனற்பண்ணாத கோடை'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/72&oldid=1207564" இலிருந்து மீள்விக்கப்பட்டது