பக்கம்:முந்நீர் விழா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அற்புதக் கொடை

73



புலவர் தயங்கித் தயங்கி நின்றார், வள்ளல், இன்னும் என்னிடம் உள்ளது யாதும் இல்லை. இருந்தால் கொடுப்பேன் ' என்றார்.

' உங்களிடம் இன்னும் கொடுக்க ஒன்று இருக்கிறது” என்று அந்தத் துணிவு மிக்க புலவர் கூறினர்.

வல்லாளர் இடுப்பைத் தடவிப் பார்த்துக் கொண்டார். செருகியிருந்த பணத்தை முன்பே கொடுத்து விட்டார். இப்போது அங்கே ஒன்றும் இல்லை. புலவர் எதைக் குறிக்கிறார் என்று அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை. "என்னிடம் இப்போது உங்களுக்குக் கொடுக்க என்ன இருக்கிறது?’ என்று கேட்டார். .

புலவர் அதை வாயால் கூறவில்லை. கையால் குறிப்பித்தார்; அவர் இடையில் அணிந்திருந்த ஆடையைச் சுட்டிக் காட்டினார். வள்ளலுக்கு வியப்போ கோபமோ உண்டாகவில்லை. புன்முறுவல் பூத்தார். சிறிது யோசித்தார். சுற்று முற்றும் பார்த்தார். இடையில் இருந்த ஆடையையும் அவிழ்த்து அளித்து விட்டுக் கோவணத்துடன் நின்றார்.

புலவர் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு போய்விட்டார். கோவணத்துடன் நின்ற வள்ளல், வழியில் அவ்வாறு நிற்கக் கூடாது என்று கருதி மறை விடம் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தார். நல்ல வேளையாக அருகில் ஒரு குளம் இருந்தது. அங்கே விரைந்து சென்றார், குளத்துக்குள் இறங்கி இடுப்பளவு நீரில் நின்று கொண்டார். . -

அங்கு இருந்தபடியே தம்மை அறிந்தவர் யாரேனும் அந்த வழியாக வருகிருர்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தார். புகழ்பெற்ற அவரை அறியாத மக்கள் அந்த வட்டாரத்தில் யார் இருக்கிறார்கள்? அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/82&oldid=1214796" இலிருந்து மீள்விக்கப்பட்டது