பக்கம்:முன்னும் பின்னும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் 27

என்னெஞ் சுருக்கவவள் தன்னெஞ்சு கற்றகலை

என்னென் றுரைப்ப தினிநான்

சின்னஞ் சிறுக்கியவள் வில்லங்கம் இட்டபடி

தெய்வங் களுக்கு பயமே.

நூல்: விவேக சிந்தாமணி, பக்கம் : 48, பாடல் : 76

படம் :

கன்னங் கறுத்த குழல்

சின்னஞ் சிறுத்தயிடை அன்னம் பழித்தநடை

சொன்னம் பழித்தஉடை உருவம் - நல்ல பருவம் - ஆஹா!

மேனகா (1935), பாடலாசிரியர் : புதுக்கம்பன் பூமிபாலதாஸ்.

ஆசை மீறுதே யென்னைக்கூடி மகிழ்ந் தணைந்து சுரதசுகந் தாடி வாசமுள்ளமதன் வாட்டுறானடி மார்பிலேக்கணை பூட்டுறானடி நேசமாகக் கண் காட்டுறானடி நினைக்கும்படிமையல் மூட்டுறானடி.

நூல் : மனமோகன வள்ளியம்மை பரதம் (1922), பக்கம் : 184, நூலாசிரியர் : முத்துலாபுரம் மதுரபாலகவி வி.பி.எம்.ராமசிங்கம்.

எதிர்ப்பத அவஸ்தைக்கு பழைய நிகண்டில் வார்த்தை யாசிக்கிறேன்.... வான சாஸ்திரம் படித்தநீ எப்பொழுது சாமுத்ரிகா லட்சணம் கற்று வைத்தாய்

சரியாகப் பார்க்காமல் என் அங்கமச்ச அடையாளங்கள் உனக்கெப்படி பரிச்சயமானது....? வியப்புக் குறியின் கோடாக நான்.... கீழே போடும் புள்ளியாக நீ...! இருவரும் தொட்டுக் கொள்ளவில்லை... ஆனாலும் உன்னில்நான் எழுந்து நிற்கிறேன்... வியப்புக் குறியின் கோடாக நான் கீழே போடும் புள்ளியாக நீ.