பக்கம்:முன்னும் பின்னும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

படம் : - முன்னும் பின்னும்

            அமராவதி பாட்டு
     (தேடித்தேடி வந்தேனடி மெட்டு) 
  ஆத்தோரம் அரளித் தோட்டம் - இந்த 
  அமராவதி வாழுங் கூட்டம்.
  தேடிப் பார்த்தேன் அதிரூபனை 
  என்று பார்ப்பபேனோ கண்ணால் தானே 
  ஏத்தம் போட்டிறைத்தே னானே 
  உம்மை எங்குமே காண்கி லேனே 
  எங்கள் - தாத்தா சங்கரலிங்கம் 
  பாட்டைப்பாடி - தானே உன்னைத் தேடுகிறேனே.
படம்: அதிருப அமராவதி (1935), 
பாடலாசிரியர் : எஸ்.எஸ்.சங்கரலிங்க கவிராயர், 
பாடியவர் : மிஸ். டி.எஸ். வேலாம்பாள், 
       இசைக்குழு : 
ஆர்மோனியம் - ரங்கசாமி நாயகர், 
சாரங்கி - அப்துல் சத்தார், 
தபேலா : கோவிந்தசாமி. 

இராகம் - சங்கராபரணம் - தாளம் - ரூபகம்

   புவியினின்பம்
     பொருந்தும் துன்பம் 
   புண்ணிய மிகுந்திடு தேகம்
     கண்ய மிதன்சுக போகம் 
   பொங்கும் பக்தி யோக சாரம்
     மங்காக் கீர்த்தி யாமிந் நேரம் 
   அற்புத சக்தி நிலைத்திட
     பெற்புலர் சித்த மளித்திட
   அடலுறு பவிவினை யதிலமர்ந்
     திடமுடல் வதைமட சிதைத்திடு           
                                                 (புவி) 
   மனமடக்கியே வாழ்ந்திடு பாக்யம்
     மறுமை தன்னில் விளைந்திடு பாக்யம் 
   மாண்புறுவேத மாணிக்க வாக்கியம்
     மண்டலந் தன்னிலே கொண்டிருஞ் சிலாக்கியம்.
                                                 (புவி) 
படம்: விஸ்வாமித்திரா (1936), 
பாடலாசிரியர் : கே.எம். வேதமாணிக்கம்
      ஓராமாதம் என் உடலது தளர்ந்து, 
      ஈராமாதம் என் இடையது நொந்து
          என் இருஸ்தனம் பூரித்து 
      மூன்றாம் மாதம் என் முகமெல்லாம் வெளுத்து