பக்கம்:முன்னும் பின்னும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 29

முலைநுனி கருத்து பச்சைநரம்போடி என்பால்முகம் சுரந்து நான்காமாதம் நசுக்கிய மசக்கை ஐந்தாம்மாதம் எனது அழகுசீமந்தம் செய்தார் ஆறாமாதம் என் அடிவயர் கனத்து

என் அங்கமே தங்கமாகி ஏழாமாதம் உன் மாமன்மார்வந்து முத்துக்கால் பந்தலிட்டு முகமலர்ந்து எனக்கு அழகு சீமந்தம் செய்ய கட்டித் தயிரும் கலந்து, பிசைந்து சம்பா அரிசி சமைத்து வடிக்க வன்னல் வகையுடன் வரிசையும் கொணர்ந்தார் என்நா வுக்கு இனியதைப் புசித்தேன் எட்டாம்மாதம் என்நெற்றிப் பொட்டுமே தளர்ந்து இப்பட்டணம் அறியஎன் பாங்கிமார் வந்து எனக்கென்று பட்டுப் பாவாடை உடுத்தினார்; ஒன்பதாம் மாதம் ஓடியே என்வயிற்றில் ஒரு பக்கமாய் தாங்கநான் ஒலைபோல் சென்று களைத்தேன் பத்தா மாதம் பரமனுடைய அருளால் என் நெற்றி வேர்வை நிலத்தில் விழுக மெத்த வேதனையால் முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்து அந்திபகலாச்சிவனை ஆதரித்து என் தொந்திசரிய சரியச் சுமந்து என் அருமைமகனே என் ஆசைமகனே நீஜனித்த பத்தாமாதம் என் பனிக்குடம் உடைந்து ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்று கனகமுலைப்பால் தந்து வளர்த்த பாவியாள் இக்கானில் பெரும்பாம்பிற்கு இரையாக்கி னேண்டா. படம் : விஸ்வாமித்திரா (1936), பாடலாசிரியர் : கே.எம். வேதமாணிக்கம், பாடியவர் : மிஸ் இராஜசுந்தரி

தொகையறா பிறப்பினில் தாழ்வில்லை எனப்பல ஆண்டுகள்

பெருந்தொண்டு புவியிஞ்சுதே -