பக்கம்:முருகன் அந்தாதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

கருத்தி லிருந்து கதிகாட்டி
ஏழை களிக்கும்வணம்
திருத்தி அடிவீழ்க் திருக்குமா
ளாக்கித் திருவருளிற்
பொருத்தி வினேமயல் போக்குகின்
ருன்வெட்சிப் பூவழகன்
மருத்தருஞ் சோலே மருத

மலைதிகழ் வானவனே.
(7)



வானவ னென்றும்கம் கண்கண்ட
தெய்வ வடிவனென்றும்
தேனவன் என்றும் திகழ்மறை
மேலுறு தேசனென்றும்
யான்அவன் றன்னை அறிவதன்
முன்னம் எனையடிமை
தானெனக் கொண்டனன் மாமரு

தாசலச் சண்முகனே.
(8)


முகம்ஆறும் ஆதாரம் ஆறிலும்
நின்று முதிர்அருளிற்
புகயோகு செய்பவர் தம்துணே
யாகிப் பொலித்திலகும்


7. கதி-அடையும் இடம். மரு தரும்-நறுமணத்தை வீசும்.

8. தேசன்-சோதி வடிவன்.