பக்கம்:முருகன் அந்தாதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

தகஆ றெனுஞ்சம யப்பொரு
ளாகித் தயைபுரியும்
புகழேறு கின்ற மருத
மலேவாழ் புனிதனுக்கே. (9)


புனிதம் பெறும்வணம் முன்னுள்
அரன்கட் பொறியெனவே
இனிதுறக் கொண்டு பகீரதி
ஏந்தும் இயல்பதனால்
நனியின்று மாப்புனி தக்கங்கை
ஆயினள் நானிலத்தில்
கனிதுன்று பூம்பொழில் மாமரு
தாசலக் கந்தனேயே.  (10)


தனே மறந் தோங்கும் தவத்தினர்
உள்ளத் தனிக்குகையில்
வினைமறந் தோங்கிய மோனத்தில்
ஒன்றி விளங்குகின்ருன்
தினமறந் தின்குரல் கேட்டுக்
கிளிகள் திளேக்கும்வள்ளி
யினைமற வாவேள் மருத
மலேயில் எழிற்குகனே.  (11)


9. முகம் ஆறும் இலகும், புரியும்.

10. பொறி-தீப்பொறி, பகீரதி-கங்கை. துன்று-செறிந்த. கந்தனை முன்னாள் உறக் கொண்டு. முருகனத் தாங்கியமையால் கங்கை புனிதம் பெற்றனள்.

11, உள்ளத் தனிக் குகை-தகராகாசம். வினை-செயல்