பக்கம்:முருகன் அந்தாதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


பாதமென் பற்றைப் பரியப்
படரும் படிபற்றினேன்
ஏதமொன் றின்றி யருளாய்
மருதக்குன் றேய்ந்தவனே. (29)

குன்றாத செல்வம் குறையாத
இன்பம் கொளக்கொளமேல்
என்றேனும் வற்றாக் கருணைப்பே
ராறாம் இடர்ப்பிறப்பில்
நின்றேறு வார்க்குப் புணையாம்மெய்ஞ்
ஞான நிலையதுவாம்
வென்றேறு வேலன் மருதா
சலன்றன் விரையடியே. (30)

அடிகண் டடைந்து பணிந்தால்
அகந்தை அறுமென்றஅப்
படிகண் டிறைஞ்சித் தடியென
வீழ்ந்தனன் பாவமெலாம்
தடிகண்ட பாம்பென ஓடின
நின்னருள் தாங்கப்பெற்றேன்
வடிகண்ட கண்வள்ளி நாதா
மருத மலேயவனே. (31)


29.பற்றைப் பரிய-பற்றுக்களை நீங்கும்படி ஏதம்-தீங்கு.

30.புணை-தெப்பம். விரை-நறுமணமுள்ள.

31.வடிகண்ட-மாவடுவை ஒத்த.