பக்கம்:முருகன் அந்தாதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14


மலைமுனர்த் தோன்றப்பின் தோன்றிற்று
மண்எனின் மாண்புறுமம்
மலையினில் தெய்வம்முற் றோன்றிய
தெய்வமா வாழ்த்தல்தகும்
கலையினில் தேர்ந்த தமிழர்
குறிஞ்சிக் கடவுளென்றார்
கலையுணர் வார்சொல் மருத
மலைதிகழ் கந்தனேயே. (32)

தனையே நிகர்க்கும் அருண
கிரிஎன்றன் தந்தைஅன்று
நினையே சரனென்று புக்கான்
அவற்கருள் நீட்டியேநீ
எனையே அடிமைஎன் றேன்றுகொண்
டாலஃ திழிவுகொலோ
முனேயேது மில்லா மருதா
சலத்து முதலவனே. (33)

முதலும் முடிவும் நடுவும்இல்
லாத முழுப்பொருள்நீ
அதுவும் இதுவும் உதுவுமென்
றேசுட் டரியபொருள்


32. "கல்தோன்றி மண்தோன்ருக் காலத்தே" என்பது புறப்பொருள் வெண்பாமாலை.

33. தனையே நிகர்க்கும்.வேறு யாரும் ஒவ்வாமல் தன்னைத் தானே ஒத்து நிற்கும். முனை-முன்நிற்கும் ஒப்பு.