பக்கம்:முருகன் அந்தாதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பண்மணி பார்மரு தாசலம்

மேய பரஞ்சுடரே.
(46)

சுடரும் விளக்கும் தனிச்சோ
தியுமெனத் தோன்றுநினை
இடரொன்று மின்றி எனதுளத்
தேற்ற எதுவழியோ
திடரொன்று குன்றக் துளைத்தவை
வேல சிவன்மைந்தனே
அடர்கின்ற பூம்பொழி லார்மரு

தாசலத் தானந்தனே.
(47)

ஆனந்த மாய்என் அறிவாய்
அறிவா லணைசுடராய்த்
தானந்த மில்லாத் தனிப்பொரு
ளாய்கின்ற தத்துவனே
தேனந்த லின்றிச் சொரியும்
மருதத் திருமலைஎம்
மான் அந்த கன்வருங் காலை

அரனென் றருளுவையே.
(48)

46. கண்மணி-உருத்திராட்சம். பண்மணி ஆன-இராகம் அமைந்த மாணிக்கம் போன்ற. மணியாகிய-அழகாகிய, பண்செய்தருள். மணி ஆர்-க்வமணிகள் நிரம்பிய

47. சுடர்-குரியசந்திராக்கினிகள். திடர் ஒன்று - மேடு களே உடைய,

48. தான் அந்தம் இல்லா. தேன் நந்தல் இன்றிச் சொரி யும்; கந்தல்-குறைதல். எம்மான்-எம்பெருமானே. அந்தகன், . யமன். அரண்-பாதுகாப்பு.