பக்கம்:முருகன் அந்தாதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

வைவேற் கரத்தவன் மைவேற்கண்
குஞ்சரி மாலைகொண்டான்
நைவேற் கருள்செய்து சாந்தி
அளித்தமெய்ஞ் ஞானகுகன்
மெய்வேற் றுமைபோகச் சொன்மறை
போற்றும் விமலன்வள்ளி
வைவேற்ற காந்தன் மருத
மலையை மகிழ்ந்தனனே. (49)

மகிழ்ந்துசெம் மாந்து பயமின்றி
வாழ வழியுண்டுகாண்
நெகிழ்ந்து மிகக்கசிந் துள்ளெலும்
பெல்லாம் நெகநின்றுகண்
அகழ்ந்திடு முற்றென நீர்பெய
வாழ்த்தி அணேந்துதினம்
புகழ்ந்திடு வாய்நெஞ்ச மேமரு
தாசலப் போதனையே. (50)

போதனை முன்னட் சிரத்தினிற்
குட்டிப் பொருந்து சிறை
வேதனை கொள்ளப் புகுத்திநின்
றான்அது வீண்பிறவி


49. வை- கூர்மையான குஞ்சரி-தேவயான. நைவேற்குவருந்துகின்ற அடியேனுக்கு. வைவு ஏற்ற.

50. போதன்-உபதேசம் செய்யும் குரு.