பக்கம்:முருகன் அந்தாதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ஏதமெய் தாமல் அருள்வா

னெனுமுண்மை எய்துவிக்கும்

பூதலம் போற்றும் மருதா

சலத்துறை புண்ணியனே. (51)


புண்ணியம் கண்ணிய கண்ணியர்

கொங்கிற் பொலிமருதத்

திண்ணிய குன்றினில் அண்ணிய

தேனைத் தெளிந்தருந்தி

மண்ணிய நன்மணி என்ன

இருந்தார் மதியிலிசொல்

தண்ணிய னல்லேன் மயலுழந்

தேனென் தலையெழுத்தே. (52)


எழுத்திற் கதுவாத நான்மறைக்

குட்பொருள் என்தலையின்

எழுத்தைக் குறைத்துப் பவகோயை

மாற்றும் எளியபொருள்

எழுத்திற் பதத்திற் பொருளிற்

சிறக்கும் இனியதமிழ்

எழுத்திற் பொலிபொருள் மாமரு

தக்குன் றிருந்ததுவே. (53)

51. போதனை-மலரிலுள்ள பிரமனை. ஏதம்-துன்பம்.

52. கண்ணியர்-மதிப்புடையோர். மண்ணிய சாணையிட்ட சொல் தண்ணியன் அல்லேன்-குளிர்ந்த சொல்லே உடையவனல்லாத யான், -

53. கதுவாத - அகப்படாத, பவ நோயை - பிறவியாகிய பிணியை. பதத்தில் சொல்லில். தமிழ் எழுத்தில்-தமிழில் எழுதிய நூல்களில்.