பக்கம்:முருகன் அந்தாதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சூதாங் தரமிந்த நூலறி
வென்று துணிந்தடைந்தேன்
ஈதாந் தனித்துணை யென்றே
மருதன் இணையடியே. (56)

இணையொன் றிலாவருள் ஆர்தரு
வார்பகை என்னவெண்ணிக்
கணையும் படையும் கொடுவந்த
சூரைக் கருணையினால்
அணையும் எழிலூர்தி யென்றும்
கொடியென்றும் ஆக்கினனல்
துணையுந் தொழுந்தேவு மாம்மரு.
தாசலச் சோதியன்றே. (57)

சோதிச் செழும்பொருள் ஓங்காரம்
என்னும் சுடர்ப்பிழம்பாம்
ஆதிக் கடவுள்பின் அந்தமில்
லாத அருமைப்பொருள்
சேதிக்க ஒண்ணுப் பரம்பொருள்
செம்பொருள் தேவர்தங்கள்
மாதுக்க நீக்கி மருதா
சலத்தில் வயங்கிய.ே (58)


56. சூது ஆம் தரம்-வஞ்சகமான நிலேயுடையது. இணையடியை, ஈது தனித்துனே ஆமென்று அடைந்தேன்.

57. இணை- ஒப்பு. கண-அம்பு. சூரை-சூரபன்மனை. ஊர்தி-வாகனம்.

58. சேதிக்க - குலைக்க, அழிக்க.