உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் அந்தாதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

தேவாதி தேவா திருமுரு

காவள்ளி சேர்கணவா

போவா திரும்பி எனநவி

லாவண்மை பூத்தவனே

சாவாதி துன்பத்தை நீக்கும்

பிரான்மரு தாசலனே

நோவா திருவென வந்தெனக்

கோர்சொல் நுவலுவையே. (59)


நுவலற் கினிய புகழுடை

யாய்கண்கள் நூறுபல

குவியப் பெறுகினும் கண்டடங்

காஎழில் கொண்டவனே

தவலற்று மாறா இளமை

படைத்தமைந் தாஅடியார்

கவலைப் படாமல் மருதா

சலத்துருக் காட்டினேயே. - (60)


காட்டினே யேல்எளி யேன்காண்பன்

தண்ணென் கருணையினல்

ஊட்டினே யேலதை உண்பன்நல்

லோர்கள் உறவெனக்குக்

59. இப்போது போ, பிறகு திரும்பி வா என்று சொல்லாத வள்ளல் தன்மை. சாவு ஆதி துன்பத்தை பிரான்: விளி.

60. பல நூறு. தவல் அற்று-அழிதலற்று.