பக்கம்:முருகன் அந்தாதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கூட்டினே யேலவர் தம்மொடும்
கூடுவன் கோபமென்மேல்
நாட்டினே யேற்செய்வ தென்மரு
தாசல நாயகனே. (61)

நாயக குைம் பதவியை
வேண்டிலன் நற்புலமை
வாயறி வோனெனும் சீரும்
விழைகிலன் மாண்பொருளே
மேயவன் என்னும் நிலையும்
விரும்பிலன் வேண்டுவதுன்
தூய அருளொன்றே மாமரு.
தாசலச் சுந்தரனே. (62)

சுந்தர மாமயி லேறும்
பிரானேச் சுடர்வடிவேற்
கந்தனே வே&ளக் குமரனேப்
பன்னிரு கண்ணருளால்
பந்தனை நீக்கும் மருதா
சலத்திற் பதியினத்தாள்
வந்தன செய்பவர்க் கின்னலில்
லேயின்ப வாழ்வுறுமே. (63)


62. வாய்-பொருந்திய, 63. பக்தன.-பாசத்தை. பதி-தலைவன்,