பக்கம்:முருகன் காட்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - m முருகன் காட்சி

அருளிய வரலாற்றினையும் . சிறப்பாகக் குறித்துள்ளார். . இனிக் கச்சியப்பர் காட்டும் முருகனைக் காண்போம்.

பாயிரத்தில் வரும் காப்புச் .ெ ச ய் யு ளி ல் *சுப்பிரமணியர் காப்பு என்று காணும் பாடலிலேயே, கச்சியப்பர் காட்டும் முருகனின் தோற்றப் பொலிவு தூய்மையுடன் துலங்குகின்றது. மூவிரு முகங்களிலும் கருணை பொங்குகின்றது; ஈராறு தோள்களை யாவரும் ஏத்திப் புகழ்கின்றனர். செவ்வேளின் மலரடியினையும், திருக்கையில் விளங்கும் சேவற் கொடியினையும், ஏறி அமர்ந்திருக்கும் ஊர்தியாகிய மயிலினையும், திருக்கையில் சுடர் விட்டிலங்கும் வேலினையும் போற்றிப் பரவுகின்றார் கச்சியப்பர். அவ் அழகிய துதிப்பாடல் வருமாறு:

ரூவிரு முகங்கள் போற்றி

முகம்பொழி கருணை போற்றி ஏவருந் துதிக்க கின்ற - i வீராறுதோள் போற்றி காஞ்சி

மாவடி வைகுஞ் செவ்வேள்

மலரடி போற்றி யன்னான் சேவடி மயிலும் போற்றி

திருக்கைவேல் போற்றி, இப்பாடலில் கந்தவேளையே நம் மனக் கண்முன் கொண்டுவந்து காட்டுகின்றார் கச்சியப்பர்.

திருக்கைலாயத்தில் உமையை மணந்து சிவனைத் தேவர்கள் கண்டு வணங்கி, தாங்கள் அசுரர்களால் படும் தொல்லைகளை விரித்தெடுத்துரைத்து ஒரு வரம் வேண்டினர். தங்கள் துயர் தீர்க்க, சூரனை மாய்க்க ஒl குமரன் தன்னைத் தரவேண்டும் என்றார்கள். கறைமிடற்று அண்ணலும் அமரர்தம் வேண்டுகோளுக்கு மனமிரங் கினான். சரவணப் பொய்கையில் சண்முகன் தோற்றம் கொள்கிறான். முருகப்பெருமானின் திருவவதாரத்தினை குறிப்பிடும் கச்சியப்பரின் திருப்பாடல் கவிதை வளம்