108 முருகன் காட்சி
செருக்கை யொழித்து அவருக்கு அருள் சுரந்த காரணத் தினாலேயே அருணகிரியார் கருணைக் கருணகிரி எனப் பட்டார் என்பர்.
காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி ஆசுக்குக் காளமுகி லாவனே!-தேசுபெறும் ஊழுக்குக் கூத்தன்; உவக்கப் புகழேந்தி கூழுக்கிங் கெளவையெனக் கூறு என்ற தனிப்பாடல் இதனை உணர்த்தும்.
ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார் என்றும் , =
எந்தையருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ? If என்றும் தாயுமான தயாபரர் அருணகிரிநாதரின் அருட் பெருக்கினை வியந்து போற்றியுள்ளார். அருணகிரியாரும் வில்லிபுத்துாராரும் சம காலத்தவர் அல்லர் என்றும் எனவே இச்செய்தி கற்பிதமே என்றும் மறைந்த கல்வெட்டறிஞரி திரு. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் தம் நூலிற் குறிப்பிட்டுள்ளார். -
அருணகிரியார் பாடிய பிற நூல்கள் கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு, கந்தர் அநுபூதி முதலியன வாகும். -
இத்தகு பெரியார் முருகனிடம் வேண்டுவது பின் வரு வனவாகும் :
உன் புகழே பாடி நாணிணி அன்புட னாசார பூஜை செய்து உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே.
-திருப்புகழ் (ே ஆறெழுத்தை கினைந்து குகாகுகா என
வகை வராதோ.
திருப்புகழ் 320 உனது பொற்சரணம் எப்பொழுதும் -
நட்பொடு நினைத்திட அருட் டருவாயே.
-திருப்புகழ் : 761