பக்கம்:முருகன் காட்சி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாதர் காட்டும் முருகன் 1 09

மறவாதுன் நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி நாடும்படி யருள் புரிவாயே. *

-திருப்புகழ் 1038 நோய்கள் பிறவிகள் தோறும் எனை

நலியாதபடி உனதாள்கள் அருள்வாயே.

-திருப்புகழ் : 260 யான் அவா அடங்க என்று பெறுவேனோ.

-திருப்புகழ் : 739

இறைவா எதுதா அதுதா. ==

-திருப்புகழ் : 834 அந்தகனும் எனையடர்ந்து வருகையினில் அஞ்சல் எனவலிய மயில்மேல் நீ-அந்த மறலியொடு உகந்த மனிதன் நமதன்பன் எனமொழிய வருவாயே

-திருப்புகழ் : 70 காலன் ...எனதாவி தனையே குறுகி வருபோது ஆதிமுரு காதிமுரு காதிமுரு கா எனவும் ஆதிமுரு காகினைவு தருவாயே.

திருப்புகழ் : 1.242 வாழி! இனிப்பிறவாது நீ யருள்புரிவாயே.

-திருப்புகழ் : 1204 இவ்வாறு தணிகைமனி திரு. வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள் திருப்புகழை நன்கு கற்று ஆய்ந்து அருணகிரியார் மனக்கிடக்கையை *அருணகிரிநாதர்’ என்ற தம் நூலில் புலப்படுத்தியுள்ளார்கள்.

எனவே முருகனை முழுமனத்துடன் வழுத்தினால் பிறவா யாக்கை தந்து பேரருள் சுரப்பான் என்பது கிண்ணம்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

-கந்தரநுபூதி : 51 மூ-7