1 1 8 - முருகன் காட்சி
கண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை
மலையதனை கண்ணி என்றன் கண்ணே நீ அமர்ந்த எழில் கண்குளிரக்
காணேனோ. என்று பின்னாளில் மனங்கசிந்து பாடினார்.
இளவயதிலேயே முருகப்பெருமான் தன்னை ஆட் கொண்ட அன்பின் பெருக்கினை இராமலிங்கரின் பின் வரும் திருவாக்குக் கொண்டு தெளியலாம்.
அறியாத பருவத்தே என்னைவலிங் தழைத்தே
ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார் வெம்மாலைச் சிறுவரோடும் விளையாடித் திரியும்
மிகச்சிறிய பருவத்தே வியந்துகினை நமது பெம்மான் என் றடிகுறித்துப் பாடுவகை புரிந்த
பெருமானே நான்செய்த பெருந்தவ மெய்ப்பயனே. மேலும் பிறிதொரு பாடலில் இவர், -
ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்து
என்னை ஆட் கொண்டெனை உவந்தே ஒதும்இன் மொழியால் பாடவே பணித்த
ஒருவனே என்னுயிர்த் துணைவா? என்றும் பாடியுள்ளமை கொண்டும் அறியலாம். இராம லிங்கர் தான் எழுதிய உரைநடையின் ஒரு பகுதிகொண்டும் இவ்வுண்மையினை நாம் துணியலாம்.
‘தனித் தலைமைக் கடவுளே! குமார பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியர் இன்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப் பயிற்சியை எனது உள்ளகத்தே இருந்து பயிற்றுவிக் தருளினtர்.
இவ்வாறு தமக்கு அருள்புரிந்த அறுமுகனைக் கொம்மிப் பாடலொன்றில் சிறப்புறக் கூறுகின்றார் இராமலிங்கர்: ‘ - -