பக்கம்:முருகன் காட்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 முருகன் காட்சி

நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும் செலவுநீ நயந்தனை யாயின் பலவுடன் கன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே.

-திருமுருகு. 59-66

எல்லாம் வல்ல இறைவன் அங்கிங் கெனாதபடி சங்கும் நிறைந்திருப்பவன். இவ்வண்ணத்தன், இவ்வடிவினன்’ என்று எழுதிக்காட்ட இயலாதவன். அறிவு கொண்டு ஆராய்வார்க்கு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட நிலையிலே இருப்பவன். அவனை ஆராய்ந்துகொண்டு இருக்கலாமே தவிர ஆராய்ந்து ஒரு முடிவு கட்ட முடியாது. சொல்லும் பொருளுமாய்த் துலங்குபவன் அவன். மறைகளுக்கும் எட்டாத நிறைநிலையிலே மாண்புடையார் நெஞ்சத்து அமர்ந்து விளங்குபவன் அவன். பாலிற் படுநெய் போல் மறைய நின்றுளன். பக்தி வலையிற் படுபவன் இறைவன். எல்லாமாய் இன்மையாய் உண்மையாய் உருவமாய் அருவமாய் விளக்கமுறும் இறைவனின் பேரருட் பெருங் கருணைத் திறத்தினை என்னென்பது!

சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்து கின்றது இவ்வுலகு. அவன் நிறம் செய்யன்; சிவத்த ஆடையன். குன்றி ஏய்க்கும் உடுக்கையினன். பவளத் தன்ன மேனியினன். அனைத்திற்கும் மேலாகத் தாமரை புரையும் காமர் சேவடியினன் . எனவே அடியவர்கள் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு முன்னிய வினை கைவரப்பெற முருகன் திருவருளைப் பரவி நிற்கின்றனர்.

அடியவர்கள் முருகன் சேவடியினைத் தேடிச் செல் கின்றனர். இறைவன் திருவடி நீழல் வேண்டுமென்றே அடியவர் அனைவரும் விரும்புகின்றனர். சான்றாகத் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும் கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தில் பின்வரும் குறட்பாக்களில் இறைவன் அடியிணை மலரினையே குறிப்பிட்டுள்ளார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/44&oldid=585926" இலிருந்து மீள்விக்கப்பட்டது