உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் காட்டும் முருகன் 5 §

ான்று மதுரை மாடமதுரை என வழங்கப்படுகின்றது. மேலும் கீழ்க்காணும் பல இலக்கிய மேற்கோள்கள் இக் கருத்தினை நன்கு வலியுறுத்தும்.

மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்

-மதுரைக் காஞ்சி: 249

மாடமலி மறுகிற் கூட லாங்கண்

-அகநானுாறு : 346:20

மாட மறுகின் மருவி மறுகுறக் கூடல் விழையுங் தகைத்து...... o

நான்மாடக் கூடனகர்

டபரிபாடல் : 20 25.6

மதிமலி புரிசை மாடக் கூடற்பதி

-திருமுகப்பாசுரம்

கொடிமாடக்கூடல்

-சிலப்: குன்றக்குறவை: பாட்டுமடை 24

இவ்வாறு புகழ்வாய்ந்த மதுரைக்கு மேற்றிசையில் விருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. அகநானுாற்றிலும்

செய்தி பேசப்பெறுகின்றுது:

கொடிநுடங்கு மறுகிற் கூடற் குடா அது பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து வண்டுபட டிேய குண்டு சுனை நீலத்து.

-அகநானுாறு: 149: 14-17

மலையின் அடிவாரத்தே வளம் பொருந்திய வயல்கள் _ளன. நீர்வளமும் நிலவளமும் செறிந்து அரியசேறு _ந்து காணப்படுகின்றது. சேற்றிடையே முள்ளை புடைய தாமரை மலர்களில் வண்டுக் கூட்டங்கள் இரவு முழுவதும் இனிமையுடன் தங்கி நின்று, வைகறையில் _ந்து காணும் நெய்தல் மலர்களில் தேனை உறிஞ்சிச் _ து அவற்றின் ரீங்காரம் இடையறாது கேட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/53&oldid=585937" இலிருந்து மீள்விக்கப்பட்டது