பக்கம்:முருகன் காட்சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முருகன் காட்சி

செந்துரிலே ஆறுமுகப் பெருமான் ஓராறு முகமும் ஈராறு கையுமாய் நிலைபெற்று வாழும் பண்பினையுடையவன்; திருச்சீரலைவாயினைச் சொன்ன பிறகு நக்கீரர் திருவா வினன்குடியினைக் கூறப் புகுகின்றார். முதற்கண், குற்ற மற்ற முனிவர்தம் தவவொழுக்கத்தினை விளக்குகின்றார்.

மரவுரி உடுத்த உடையினராய், அழகுடன் கூடிய வெண்சங்கு நிறத்தினை யொத்த நரை முடியினை உடைய ராய், குற்றமற விளங்கும் நிறத்தினராய், மான்தோல் பொருந்தின, விரதத்தால் உடல்வாடி இளைத்த எலும்பு தெரியும் மார்பினராய், மாறுபாட்டினையும் சினத் தினையும் மனத்தினின்று நீக்கியவராய், எவ்வகைப்பட்ட பொருள்களையும் கற்றுவல்லாரும் அறியப்படாத அறிவின் மிக்காராய், பல கலை ஞானங்களையும் கற்றுத் துறை போகிய அறிஞர்க்கு எல்லையாம் தலைமையினை உடையராய், காமம் வெகுளி முதலியவற்றையெல்லாம் தவிர்த்த தோற்றத்தினையுடையராய், தவத்தால் ஏற்படும் மெய்வருத்தம் இருப்பவும், மனத்தால் புலப்படும் துன்பம் சிறிதளவேனும் அறியப்படாத இயல்பினையுடையராய், எவரிடமும் வெறுப்பில்லாத நல்லறிவினையுடையராய் விளங்கும் துனியில் காட்சி முனிவர் முன்னே செல்கின்றனர். பின்னர்க் குறிப்பிடப்பெறும் தேவர்களினும் முருகப் பெருமானால் விரும்பப்படுவோர் முனிவரே யாதலின் முனிவர்கள் முற்கூறப்பெற்றனர்.

தவவொழுக்கத்திலே தலைசிறந்த முனிவர்தம் ஒழுக லாறுகளைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரிய ஐயனாரிதனார் வாகைப் படலத்தின்கீழ், பின்வருமாறு குறிக்கின்றார்.

நீர்பலகான் மூழ்கி நிலத்தசை இத் தோலுடையார்ச் சோர் சடை தாழச் சுடரோம்பி-ஊரடையார் கான கத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி.

-புறப்பொருள் வெண்பா மாலை : வாகை : 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/58&oldid=585942" இலிருந்து மீள்விக்கப்பட்டது