பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1006

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கெடுங்குன்றம் திருப்புகழ் உரை 533 கோபங்கொண்டு பொதுச்சபை ஏறியும் தமக்கு உரிய பொருளை வசூலிக்கும் பெண்களாலே முடக்கம் உறும் (தடைபடும்) என்னுடைய தொண்டையும் கண்டு இன்று (உனது) திருவுள்ளம் இன்பம் அடையாதோ! தெனந் தெனந் தெந்தெந்தெந் தெந்தெனானா (என்று) கூடி நெருங்கிச் சென்று நல்லமுறையில் வண்டுகள் பாட வளைந்து விளங்கும் கொம்புகளும் பூங்கொத்துகளும் நெருங்கிய சோலை சூழ்ந்துள்ள செழுமையுள்ள திண்ணிய கொடுங்குன்ற (பிரான்) மலையில் வீற்றிருக்கும் தம்பிரானே. (தொண்டு கண்டு இன்புறாதோ) 404 எதிர்நோக்கிப் போர் புரிந்தும் மூடப்பட்டும் வலிய ரவிக்கையுடன் போரிட்டு, அதைக்குத்தித் திறந்து, மலையே இவைகள் என்று (வதி) இருக்கின்றனவும், கத்துாரி பூசப்பட்டு நின்றொழுகுவனவும், முத்து நிறைந்த மாலை என்கிற யானை கட்டும் சங்கிலிகள் இற்றுப்போம்படி இடித்து அணைந்து உகிரின் நகங்களாகிய கொத்துகின்ற அங்குசத்துடன் நெருங்குகின்ற பாகர்கள் (யானையைச் செலுத்துவோர் - அணைதற்கு வரும் காமுகர்கள்) ■ எதிர்நின்று போற்ற, மார்பை மிதித்துழக்கிக் கிடந்து (கண்டவர்தம்) உடல் பதைக்கும்படி அடக்கி, நன்றாக ரதிதேவியின் கணவனாகிய மன்மதனது மணிக்கிரீடத்தை மோதியும், முக்கண்ணனும் அஞ்சும்படித் திரண்டும், நெகிழ்ந்தும், இளைஞர்தம் உயிரே உண்ணும் கவளமாக வட்டவடிவுடன் நின்று, அசைந்து-முன்னே பருத்து, கோபித்துப் பொருதற்கு உற்றனவுமான யானை போன்ற கொங்கைகளை